குறிச்சொல்: கோவை
-
கோவையில் மக்கள் தீர்ப்பாய ஆவணம் வெளியீடு!

வெல்ஃபேர் கட்சியின் முன்னெடுப்பில்ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் ஆவண வெளியீடு கோவையில் 04.01.2026 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஊபா சிறைவாசிகளின் குடும்பத்தினர் தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI கட்சி, வெல்ஃபேர் கட்சியின் நிருவாகிகள் மற்றும் பி.யூ.சி.எல் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
