-
வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!

வெனிசுவேலாவில் அமெரிக்காவானது 2002ல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதால் அப்போதைய வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் தனது ஆட்சியை இழந்தார். சாவேஸின் நலவாழ்வு ஆட்சியினால் பலனடைந்த கீழ்மட்ட வெனிசுவேலாவின் இராணுவ வீரர்களும் வெகு மக்களும் வீதிகளில் இறங்கி இரண்டே நாட்களில் அதை முறியடித்தனர். சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். அவருடைய ஆட்சியில் துணை ஜனாதிபதியாக இருந்த மதுரோ இப்போது அமெரிக்காவினால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளார். மதுரோவின் ஆசான் சாவேஸுக்கு ஆதரவாக அப்போது களமிறங்கி வெற்றியை சாதித்த சாமானிய வெனிசுவேலா மக்கள்…
-
வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்

வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக ஜன. 6 முதல் ஒரு வாரம் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) அறைகூவல் விடுக்கிறது. எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் திரு பிரவாஸ் கோஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:“அனைத்து சர்வதேச சட்டங்கள், நடைமுறைகளை அப்பட்டமாகத் தகர்த்தெறிந்து, போர் வெறியர்களான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவை குண்டுவீசி, போதைப்பொருள் கடத்தல் என்ற மோசடி குற்றச்சாட்டில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியுள்ளனர். இச் செயல், ஈராக் மீது படையெடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம்…
-
அமைப்புசாராத் தொழிற்சங்க முதல் மாநாடு!

மக்கள் சனநாயக அமைப்புசாராத் தொழிற்சங்கத்தின் முதல் அரசியல் அமைப்பு மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு!

டெல்லி கலவர “பெரிய சதி” வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இவர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்களான குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரெஹ்மான் மற்றும் முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு நீதிமன்றம் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி உமர் காலித்…
-
கோவையில் மக்கள் தீர்ப்பாய ஆவணம் வெளியீடு!

வெல்ஃபேர் கட்சியின் முன்னெடுப்பில்ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் ஆவண வெளியீடு கோவையில் 04.01.2026 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஊபா சிறைவாசிகளின் குடும்பத்தினர் தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI கட்சி, வெல்ஃபேர் கட்சியின் நிருவாகிகள் மற்றும் பி.யூ.சி.எல் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
-
காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு

தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான தனது பயண அனுபவங்களை வழக்குரைஞர் ஆ.விஜய் நூலாக்கியுள்ளார்.காரா பதிப்பகம் நூலை பதிப்பித்துள்ளனர். இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் 03.01.2026 அன்று நடைபெற்றது.நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட இலங்கை வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர் செயப்பிரகாசம் (புரட்சிகர இளைஞர் முன்னணி) அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.…
-
முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிராக அமெரிக்கா?

அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட மற்றும் இராஜதந்திர குழுக்கள், அந்தத் துறையின் சட்ட ஆலோசகர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, முஸ்லிம் சகோதரத்துவத்தை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கூடிய உடனடி முடிவை மதிப்பீடு செய்து வருவதாக கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுகிறது. வாஷிங்டனில் இருந்து கசிந்த தகவல்கள், இந்த அறிவிப்புஹ் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சர்வதேச முஸ்லிம் சகோதரத்துவ வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், வணிகப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிதி விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர…
-
ஊடகங்கள் நீதிமன்றங்கள் அல்ல!

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக 3 இஸ்லாமிய மருத்துவர்கள் உள்ளிட்ட நால்வர் தேசிய புலனாய்வு முகமையால்(என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டனர். ஆனால் நேற்று இந்நால்வரும் குண்டுவெடிப்பில் தொடர்பற்றவர்கள் எனக் கூறி என்.ஐ.ஏ இவர்களை விடுவித்தது. ஆனால் இவர்களை கைது செய்தவுடனேயே ஊடகங்கள் மீடியா ட்ரெயல் எனுப்படும் ஊடக வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டன. கைதானவர்களை மையப்படுத்தியும் அல்-ஃபலாஹ் கல்வி நிலையத்தைக் குறிவைத்தும் செய்தி ஊடகங்கள் பல்வேறு கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் கட்டமைக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டது…
-
தமிழ்க் குடியரசை உருவாக்குக – சுயாட்சி இயக்கம் தீர்மானம்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை(16.11.2025) அன்று பொள்ளாச்சியில் சுயாட்சித் தமிழ்நாடும் மக்கள் அதிகாரமும் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. தோழர் தமிழ்த்தேசம் தாவீது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கார்த்தி, நீதிக்கான கூட்டியக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் மாரிமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர். இக்கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
