பகுப்பு: இஸ்லாம்
-
முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிராக அமெரிக்கா?

அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட மற்றும் இராஜதந்திர குழுக்கள், அந்தத் துறையின் சட்ட ஆலோசகர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, முஸ்லிம் சகோதரத்துவத்தை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கூடிய உடனடி முடிவை மதிப்பீடு செய்து வருவதாக கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுகிறது. வாஷிங்டனில் இருந்து கசிந்த தகவல்கள், இந்த அறிவிப்புஹ் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சர்வதேச முஸ்லிம் சகோதரத்துவ வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், வணிகப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிதி விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர…
