‘தமிழ்நாடு தமிழருக்கே’ என நாம் சொல்லும்போது ‘மராத்தியம் மராத்தியர்களுக்கே’ என்பது தவறாகுமா?
‘..மும்பை-மராத்தியத்தின் உள்ளாட்சி தேர்தலில், மராத்தியர் அல்லாத வடநாட்டு மாநிலத்தவரை மேயராக நியமனம் செய்வோம்..’ என பாஜக மராத்திய துணைத்தலைவர் சொன்னதை ஆதரித்து, அண்ணாமலை பேசினார். இதை கண்டிக்கும் விதமாக சிவசேனையின் ராஜ்தாக்கரே பெருந்திளாக மராத்திய மக்களைத் திரட்டி கண்டனக்கூட்டம் நடத்தி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்து, அண்ணாமலையை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென சொல்வது சீமானின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரை மேயர்களாக நியமிக்க நாம் எப்படி அனுமதிக்க மாட்டோமோ, அதைப்போலவே மராத்தியர்களும் வடநாட்டார்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இதை செய்யுங்கள் என பாஜக தலைவர் சொல்கிறார், அண்ணாமலை அதை ஆதரிக்கிறார், சீமான் அண்ணாமலைக்கு துணையாக மராத்தியர்களை எதிர்க்கிறார்.
கடந்த அதிமுக-பாஜக ஆட்சிக் காலத்தில் கோவை நகரத்திற்கு மார்வாடி பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அதிமுகவிற்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. கடுமையான எதிர்ப்பு வந்தபின்னர் வாபஸ் பெற்றார்கள். கோவையின் ரங்கே கவுடர் வீதியை மார்வாடி ஜெயின் பெயர் ஒருவரின் பெயரில் மாற்ற வேண்டுமென குஜராத்தி-ராஜஸ்தானி சங்கம் கோரிக்கையை முன்னெடுத்தது.
தமிழ்நாட்டின் நகரங்களில், தமிழனை சுரண்டும், வட மாநிலத்தவர்களை மேயராக நியமனம் செய்யவதை தமிழ்தேசியர்கள் அங்கீகரிக்க இயலாது.
ஆனால் அண்ணாமலைக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக, வடநாட்டான்களை தமிழர்களுக்கு தலைவராக்க சீமானுக்கு வெட்கமிருக்காது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது, சீமானின் அண்ணாமலை ஆதரவு.
மும்பை வாழ் தமிழருக்கு ஆபத்தை உருவாக்கும், ‘சங்கி’ அண்ணாமலையின் வாய்கொழுப்பினை கண்டிக்காமல், அண்ணாமலையை தமிழனாக ஆதரியுங்கள் என சீமான் வக்காலத்து வாங்குவதென்பது, பாஜக-சங்கியிடம் பிச்சையெடுத்து நாம் தமிழர் கட்சி பிழைப்பு நடத்துவதை அம்பலப்படுத்தியுள்ளது.
சீமான்-அண்ணாமலை கூட்டு என்பது தமிழினத்திற்கு ஆபத்தானது. இந்த இரு நபர்களின் சாதியை வைத்து, இவர்களே ‘அக்மார்க்’ தமிழர்கள் என கூப்பாடு போடும் போலி-தமிழ்த்தேசியர்களை தமிழர்கள் கண்டுணரவேண்டும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் இன அடையாளம் என்பது தமது பிழைப்பை நடத்திக்கொள்ளுவதற்கான அடையாளம் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சீமான் அண்ணாமலைக்காக ஒப்பாறி வைப்பதென்பது, நாளை தமிழினத்தை விலை பேசுவதற்காகவே!
-திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்)


பின்னூட்டமொன்றை இடுக